என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மகளிர் கிரிக்கெட்
நீங்கள் தேடியது "மகளிர் கிரிக்கெட்"
வங்காளதேசத்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம் அணி. #PAKWvBANW
பாகிஸ்தான் மகளிர் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. நேற்று நடைபெற்ற ஒரே ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் வீராங்கனைகளை வங்காளதேச பந்து வீச்சாளர்கள் விரைவில் வெளியேற்றினர்.
அதனால் பாகிஸ்தான் மகளிர் அணியினர் 34.5 ஓவரில் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகமாக கேப்டன் ஜவேரியா கான் 29 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் அணி சார்பில் கதிஜா துல் குப்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 95 ரன்களை இலக்காக கொண்டு வங்காளதேசம் அணி விளையாடியது. பர்கனா ஹக் 48 ரன்களும், ருமானா அகமது 34 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
இறுதியில், வங்காளதேசம் அணியினர் 29 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கதிஜா துல் குப்ரா ஆட்ட நாயகி விருது பெற்றார். #PAKWvBANW
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AishwaryaRajesh
நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X